by Vignesh Perumal on | 2025-12-08 03:05 PM
நாடாளுமன்ற மக்களவையில் 'வந்தே மாதரம்' பாடல் குறித்த விவாதம் நடைபெற்றபோது, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் விடுதலைப் போராட்டத்தில் வந்தே மாதரத்தின் பங்கு, வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பங்களிப்பு மற்றும் 2047 இலக்கு குறித்துப் பேசினார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் வங்கத்து வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டிப் பிரதமர் மோடி பேசியதாவது: "ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராகத் துணிச்சலுடன் செயல்பட்டவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆவார். அவர், ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் கப்பல்களை இயக்கி, சுதந்திரப் போராட்டத்தில் ஒரு புதிய வழியைக் காட்டினார்."
இந்தியாவின் வரலாற்றில் இருண்ட காலத்தைக் குறித்துப் பேசிய பிரதமர் மோடி: "வந்தே மாதரம் இயற்றப்பட்டபோது நாடு அடிமைச் சங்கிலியில் சிக்கியிருந்தது. நாடு அடிமைப்பட்டு இருந்தது நமது வரலாற்றில் கருப்பு அத்தியாயம் ஆகும். எனினும், வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திரப் போராட்டத்தால் நாம் இன்று சுதந்திரமாக இங்கு அமர்ந்திருக்கிறோம்."
வருங்கால இந்தியாவைக் கட்டமைப்பதில் வந்தே மாதரத்தின் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக, வந்தே மாதரம் நம்மை ஊக்குவிக்கும். வந்தே மாதரத்தின் பெருமையைப் பறைசாற்ற நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்களவையில் நடந்த 'வந்தே மாதரம்' விவாதத்தில் பேசினார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!