by admin on | 2025-11-25 07:21 PM
திக்... திக்... 2 மணி நேரம்! - கொலை வழக்கில் அதிவேக வேட்டை! காவல்துறைக்கு 'DIG' பாராட்டு!
தஞ்சாவூர்:நவ,25- கும்பகோணம் பகுதி கொலை வழக்கில் குற்றவாளி யார்?இந்தக் கேள்வி எழுந்த சில மணி நேரங்களிலேயே, கும்பகோணம் காவல்துறையினர் அதை முடிவுக்குக் கொண்டு வந்தனர்!ஒரு தீவிரமான கொலைக் குற்றம் நடந்த நிலையில், குற்றவாளியைக் கண்டுபிடிக்க மணிநேரங்கள் அல்ல, நாட்கள்கூட தேவைப்படும் சூழலில், கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார், சுவாமிமலை காவல் ஆய்வாளர் ஜெயமோகன், மற்றும் துணையாகச் செயல்பட்ட காவலர்கள் உதய் சிங், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை, விசாரணையைத் தொடங்கி, வெறும் இரண்டு மணி நேரத்துக்குள் குற்றவாளியைச் சுற்றி வளைத்து, கைது செய்துள்ளது.மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில், இந்த மின்னல் வேகச் செயல்பாட்டைக் கெளரவிக்கும் விதமாக, தஞ்சை சரக DIG ஜியாவுல் ஹக் அவர்கள் நேரில் பாராட்டுகளைத் தெரிவித்து, காவல் அதிகாரிகளுக்கு சிறப்புச் சான்றிதழ்களை வழங்கினார்.
சட்டத்தை நிலைநாட்டுவதில் காவல்துறை காட்டிய இந்த வேகம், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிருபர் அ, மகேஷ்.
T. Muthu kamatchi evidence editor. 9842337244
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!