by admin on | 2025-11-24 10:42 PM
கும்பகோணம் அருகே சொத்து தகராறில் அரிவாள் வெட்டு; பெண்ணை தாக்கி நகை, செல்போன் பறிப்பு! மூவர் மருத்துவமனையில் அனுமதி!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் அண்ணா நகர் தெற்கு தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (34) - நித்தியா தம்பதியினருக்கும், பங்காளிகளான இளங்கோவன் மற்றும் குணசேகரன் ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இந்த தகராறு காரணமாக, (23-11-2025) இன்று காலை 8:30 மணி அளவில் இளங்கோவன் மற்றும் குணசேகரன் ஆகியோர் அத்து மீறி ராஜ்குமார் வீட்டிற்குள் நுழைந்து சட்டவிரோதமாக ராஜ்குமாரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இதனைப் பார்த்த ராஜ்குமாரின் மனைவி நித்தியா தடுக்க முயன்றதில் அருகில் இருந்த ராஜ்குமாரின் சகோதரர் கண்ணதாசன் தலையில் எதிர்பாராத விதமாக அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், எதிரிகள் நித்தியாவைக் கீழே தள்ளித் தாக்கி, அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலி மற்றும் செல்போனைப் பறித்துச் சென்றதாக நித்தியா குற்றம் சாட்டியுள்ளார்.படுகாயமடைந்த நித்தியா, ராஜ்குமார் மற்றும் கண்ணதாசன் ஆகிய மூவரும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நித்தியா உள்ளிட்டோரிடம் உரிய விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிருபர் அ, மகேஷ்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!