by Vignesh Perumal on | 2025-11-22 11:41 AM
திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுவில் தேசிய ஊரக வேலைத் திட்டப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மூதாட்டிகள் மீது அதிவேகமாக வந்த ஆட்டோ மோதியதில், ஒரு மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்துக்குக் காரணமான ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்தவரின் உறவினர்கள் வத்தலகுண்டு காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பழைய வத்தலகுண்டுவைச் சேர்ந்த ரத்தினம் (55), முத்துலட்சுமி (55), மற்றும் பிச்சையம்மாள் (53) ஆகியோர். இவர்கள் மூவரும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) வேலை செய்துவிட்டு, பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக அதிவேகமாகக் கட்டுப்பாடின்றி வந்த ஆட்டோ ஒன்று, இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி ரத்தினம் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த மற்ற இரு மூதாட்டிகளான முத்துலட்சுமி மற்றும் பிச்சையம்மாள் ஆகியோர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்த உயிரிழந்த ரத்தினத்தின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.
விபத்தை ஏற்படுத்தி, ரத்தினத்தின் மரணத்திற்குக் காரணமான ஆட்டோ டிரைவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, உயிரிழந்தவரின் உறவினர்கள் வத்தலகுண்டு காவல் நிலையம் முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!