by Vignesh Perumal on | 2025-11-20 03:34 PM
இந்தியாவின் தென்கோடி முனையாகவும், உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில், பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) டாக்டர் ஆர். ஸ்டாலின் IPS அவர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று நேரில் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களைக் காண தினமும் ஏராளமான பக்தர்களும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.
இப்பகுதிகளில் நிலவும் கூட்ட நெரிசல், கடலில் குளிக்கும்போது ஏற்படும் விபத்துகள் மற்றும் பயணிகளின் உடைமைகளைப் பாதுகாப்பது தொடர்பான விஷயங்களில் எஸ்.பி. ஸ்டாலின் அவர்கள் தனி கவனம் செலுத்தி ஆய்வில் ஈடுபட்டார்.
இப்பகுதியில் பணியில் இருக்கும் கடல்சார் பாதுகாப்புப் படையினர், கடற்கரைக் காவலர்கள், ரோந்துப் பணியில் உள்ள காவலர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும், பாதுகாப்பு நடைமுறைகள், அவசரக்கால மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
எஸ்.பி. டாக்டர் ஆர். ஸ்டாலின் அவர்களின் இந்த ஆய்வுப் பணியின்போது, கன்னியாகுமரி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளர் அருண் ஆகியோர் உடனிருந்து, கள நிலவரங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் எஸ்.பி. நேரில் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வது, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்கு மாவட்ட காவல்துறை அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!