by admin on | 2025-11-18 06:35 PM
ராமேசுவரத்தில் வ.உ.சிதம்பரனாரின் 89 ஆம் ஆண்டு நினைவு தினம்
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ராமேசுவரம்,நவ.18: ராமேசுவரத்தில் அகில இந்திய வ.உ.சி. பேரவை சார்பில் சுதந்திர போரட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 89 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி 150 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அதன் தலைவர் வேடராஜன் செவ்வாய்கிழமை வழங்கினார்.
நாட்டின் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 89 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் கெந்தமாதன பர்வம் செல்லும் வழியில் உள்ள அலுவலக மையத்தில் அகில இந்திய வ.உ.சி. பேரவை சார்பில் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவானந்த சுவாமிகள், சரஸ்வதி அம்மாள் தலைமை வகித்தார்.
ராமேசுவரம் வ.உ.சி. பேரவை தலைவர் வேடராஜன், ராமநாதபுரம் தலைவர் சூரிய பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ராமநாத சுவாமி திருக்கோயில் பேஸ்கார் ராமநாதன், முன்னாள் பேஸ்கார் கண்ணன், மற்றும் நிர்வாகிகள் ஆனந்தன், சரவணன், பிரகாஷ், தர்மராஜன், செந்தில், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து, 150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
டி .முத்துக்காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர் 9842337244
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!