by Vignesh Perumal on | 2025-11-18 08:51 AM
கன்னியாகுமரியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் வில்சன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள SSI வில்சன் காவலர் நல விடுதியின் நுழைவு வளைவினை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் இன்று (நவம்பர் 17, 2025) திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள இந்த விடுதி, ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் என அனைவரும் இந்த விடுதியை ரூபாய் 125 என்ற மிகக் குறைந்த வாடகைக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பணி நிமித்தமாகவோ அல்லது சுற்றுலா நிமித்தமாகவோ கன்னியாகுமரிக்கு வருகை தரும்போது, அவர்கள் இந்தத் தங்கும் விடுதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த விடுதி திறக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே, இதுவரை சுமார் 800-க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் இந்த வசதியைப் பயன்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
SSI வில்சன் நினைவு காவலர் நல தங்கும் விடுதிக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின். IPS அவர்கள் புதியதாக அமைக்கப்பட்ட நுழைவு வளைவினைத் திறந்து வைத்தார்.
இந்தத் திறப்பு விழாவில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நாகசங்கர்,
மார்த்தாண்டம் மற்றும் கன்னியாகுமரி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. நல்லசிவம், திரு. ஜெயச்சந்திரன், ஆய்வாளர்கள் திரு. சரவணன், திரு. அருண் மற்றும் காவல் துறையைச் சேர்ந்த பல காவலர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டக் காவல் துறையினர், காவலர்களின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி, இதுபோன்ற சிறப்பான வசதிகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!