by Vignesh Perumal on | 2025-11-06 05:59 PM
கோவை கல்லூரி மாணவி பாலியல் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவத்தைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மகளிர் அணியினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவி பூங்காவனம் மற்றும் மேற்கு மாவட்ட மகளிரணி தலைவி சித்ராமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலாளர் கதலிநரசிங்கபெருமாள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மாநில செயற்குழு உறுப்பினர்களான தனபாலன், பழனிவேல் சாமி, எஸ்.கே.பழனிச்சாமி, போஸ் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் குற்றம் சாட்டி, கோவையில் இந்த கொடூரச் செயலை நிகழ்த்திய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி ஆவேசமான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு, கோவையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கோரி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!