by Vignesh Perumal on | 2025-09-28 02:45 PM
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற அரசியல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.
மாநிலத்தை உலுக்கிய இந்தத் துயரச் சம்பவத்தில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்ததில் உள்ள விதிமீறல்கள், மற்றும் உயிரிழப்புகளுக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகள் குறித்து ஆளுநர் கவலை தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்துப் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, இந்த விபத்துக்கான சரியான காரணங்கள், சம்பவத்தின் முழுமையான விவரங்கள் மற்றும் விபத்தைத் தவிர்க்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து முழுமையான மற்றும் விரிவான அறிக்கையை ஆளுநர், முதலமைச்சரிடம் கோரியுள்ளார்.
இந்த விபத்து குறித்து ஏற்கனவே நீதி விசாரணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநரின் இந்தக் கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!