by Vignesh Perumal on | 2025-08-25 01:18 PM
திண்டுக்கல்லில் வழிப்பறி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த வாலிபர், தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் பயந்துபோய் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த இருளப்பன் என்பவரின் மகன் விக்னேஷ் (எ) விக்னு (28). இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழிப்பறி வழக்கில் கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில், விக்னேஷ் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட சதித்திட்டம் தீட்டுவதாகத் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தனிப்படை போலீசார் மூன்று பேர் விக்னேஷின் வீட்டிற்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், நாளை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு கூறிவிட்டுச் சென்றனர்.
போலீசார் தன்னிடம் வந்து விசாரணை நடத்தியதால், விக்னேஷ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். "போலீசார் என் மீது மீண்டும் பொய் வழக்குப் பதிவு செய்ய நினைக்கிறார்கள்" என்று தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் இருந்த பிளேடை எடுத்து தனது கை மற்றும் கழுத்துப் பகுதியில் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அவரது குடும்பத்தினர் விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் குழு......
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!