by Vignesh Perumal on | 2025-08-12 02:18 PM
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக முதலமைச்சரால் தொடங்கப்பட்ட 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என 70 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையில், 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுடைய பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கப்படும்.
பழனி தொகுதியில் உள்ள 7 மற்றும் 8வது வார்டுகளில் உள்ள பி.சி.எம்.எஸ். கடை எண் 9-ஐச் சேர்ந்த பயனாளிகளுக்கு, பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பழனி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் செந்தில்வேல் பாண்டியன் அவர்கள் ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்கினார்.
இந்த நிகழ்வில் நகர்மன்ற மூத்த உறுப்பினர் கே.சுரேஷ், நகர்மன்ற உறுப்பினர் இந்திரா திருநாவுக்கரசு, கூட்டுறவுத் துறை அலுவலர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பழனியில் இத்திட்டம் தொடங்கப்பட்டதால், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர் - கதிரேசன் பழனி-திண்டுக்கல்
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!