by Vignesh Perumal on | 2025-08-07 02:41 PM
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) ரமேஷ் (48) என்பவர், ₹2,500 லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ், ஒரு வேலையை முடிப்பதற்காகப் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து, பாதிக்கப்பட்ட நபர் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசியமாகத் தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், ரமேஷைப் பின்தொடர்ந்து கண்காணித்தனர். இன்று, ரமேஷ் லஞ்சமாக ₹2,500-ஐப் பெற்றபோது, கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ரமேஷிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!