by Vignesh Perumal on | 2025-07-01 11:28 AM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் வெளியூரைச் சேர்ந்த மாணவி ஒருவரின் சுடிதார் கிழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தட்டிக் கேட்ட அவரது தந்தையின் கழுத்தை பிளேடால் அறுத்த ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் அதே வெளியூரைச் சேர்ந்த ஒரு மாணவன், நீண்டகாலமாக இந்த மாணவிக்கு காதல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தொந்தரவுகள் குறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
மாணவியின் தந்தை, தனது மகளுக்கு தொந்தரவு கொடுத்த மாணவனிடம் சென்று, இது குறித்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சம்பந்தப்பட்ட மாணவன், தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து, இரு இருசக்கர வாகனங்களில் வந்துள்ளார். அப்போது, மாணவியின் தந்தையின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கழுத்தில் பலத்த வெட்டுக் காயமடைந்த மாணவியின் தந்தை உடனடியாக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் தந்தை அளித்த வாக்குமூலம் மற்றும் சம்பவ இடத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களைக் கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழல் குறித்த கேள்விகளை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. மாணவர்களிடையே இத்தகைய வன்முறைச் செயல்கள் அதிகரிப்பது குறித்து பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!