by Vignesh Perumal on | 2025-06-30 02:15 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் அறிவித்துள்ளார். இந்த முகாம்கள் இனிவரும் காலங்களில் குறிப்பிட்ட நாட்களில் மூன்று வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் நடைபெறும்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (வார்டு எண்: 210) ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும். அதேபோல் பழனி அரசு மருத்துவமனை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும். கொடைக்கானல் அரசு மருத்துவமனை ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழக்கிழமைகளில் நடைபெறும்.
மேலும், இந்த முகாம்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தித் தரப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!
கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே உல்லாசம் - இடையூறாக இருந்த கணவன் கொலை ! 3 பேரை தூக்கிய போலீஸ் !!
ரயிலில் கணவருக்கு சீட் - மனைவியிடம் பாலியல் அத்துமீறல் ! போதை டிடிஇ கைது !!
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!