by Vignesh Perumal on | 2025-06-27 02:20 PM
திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக ஐஏஎஸ் அதிகாரி எம்.பி. அமித், இன்று (வெள்ளிக்கிழமை) மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். முந்தைய ஆணையர் எஸ். ராமமூர்த்தி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, எம்.பி. அமித் இந்த முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த எம்.பி. அமித், 2019 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) பிரிவைச் சேர்ந்தவர். இவர் இதற்கு முன் சென்னை மாநகராட்சியில் பிராந்திய துணை ஆணையராகப் பணியாற்றி வந்தார். நகர்ப்புற நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்த இவர், திருப்பூரின் வளர்ச்சிக்குத் தனது பங்களிப்பைச் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையர் எம்.பி. அமித், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் நிலவும் முக்கியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது தனது முன்னுரிமை என்று தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: "திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதற்கு நான் முக்கியத்துவம் அளிப்பேன். இந்தப் பிரச்சனைகளை விரைந்து களைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்."
"மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில், அனைத்துத் தரப்பு மக்களையும் கலந்து ஆலோசித்து, நியாயமான முறையில் தீர்வு காணப்படும். பொதுமக்கள் என்னை அலுவலக நேரங்களில் நேரில் சந்தித்துத் தங்களின் குறைகளை மனுக்களாக அளிக்கலாம். அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்."
புதிய ஆணையர் பொறுப்பேற்றபோது, மாநகராட்சி துணை ஆணையாளர்கள் ரா. மகேஸ்வரி, சுந்தரராஜன், தலைமைப் பொறியாளர் முகமது சபியுல்லா, உதவி ஆணையாளர் (கணக்கு) தங்கவேல்ராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்படப் பலரும் உடனிருந்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
திருப்பூரில் முக்கிய வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில், புதிய ஆணையரின் வரவு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி- எடிட்டர். முத்தழகர் திருப்பூர்.
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!