by Vignesh Perumal on | 2025-05-10 11:32 AM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த புதுசெட்டியூரைச் சேர்ந்த வளர்மதி என்பவர் அளித்த புகாரின் பேரில், பக்கத்து நிலக்காரர்கள் 4 பேர் மீது கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வளர்மதி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது: கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பக்கத்து நிலக்காரர்களான நடராஜன், ரங்கராஜ், கண்ணம்மாள் மற்றும் மதன்குமார் ஆகியோருக்கும் இவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, மேற்கண்ட 4 பேரும் சேர்ந்து வளர்மதியின் வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும், வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதுடன், கோடாரியை கையில் வைத்துக்கொண்டு வளர்மதியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
வளர்மதி அளித்த இந்த புகாரின் அடிப்படையில், கூம்பூர் போலீசார் நடராஜன், ரங்கராஜ், கண்ணம்மாள் மற்றும் மதன்குமார் ஆகிய 4 பேர் மீதும் கொலை மிரட்டல், சொத்து சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் புதுசெட்டியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!