by Vignesh Perumal on | 2025-05-07 09:56 AM
தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (08.05.2025) வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நாளை காலை 9 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் +2 தேர்வு முடிவுகளை வெளியிடவுள்ளார்.
தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது முடிவுகளை பின்வரும் இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்: dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டவுடன், மாணவர்கள் மேற்கண்ட இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!