by Vignesh Perumal on | 2025-05-06 07:58 PM
திண்டுக்கல் மேற்கு மரியனாதபுரம் புது தெருவைச் சேர்ந்த பெயிண்டர் ஜஸ்டின் இருதய ஜேசுராஜ் (46) கடன் பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜஸ்டின் இருதய ஜேசுராஜ் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத மன உளைச்சலில் அவர் இருந்து வந்துள்ளார்.
நேற்று (05.05.2025) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜஸ்டின் இருதய ஜேசுராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர்.
பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!