by Vignesh Perumal on | 2025-05-06 07:45 PM
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சாலைப்புதூர் பகுதியில் இன்று (06.05.2025) நிகழ்ந்த சாலை விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கட்டாம்பட்டியைச் சேர்ந்த கமல்ராஜ் (27) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இந்த விபத்தில் கமல்ராஜ் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கமல்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்தும், பேருந்து ஓட்டுநர் கவனக்குறைவாக ஓட்டியது காரணமா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
விசாரணை கைதி மரணம் ! உடலை வாங்க மறுப்பு !!
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!