by Vignesh Perumal on | 2025-03-26 09:31 PM
சென்னையில் உள்ள நந்தனம், சாஸ்திரிநகர், இந்திரா நகர், கிண்டி, வேளச்சேரி, விஜயா நகர் ஆகிய இடங்களில் நேற்று சங்கிலித் தொடர் போல தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் காரணமாக, உஷார் அடைந்த போலீசார், ஆங்காங்கே, இரும்பு தடுப்பு அமைத்து சோதனை மேற்கொண்டனர். விமான நிலையத்திற்கும் தகவல் தரப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, யாராவது கடைசி நேரத்தில் வந்து விமானத்தில் செல்ல டிக்கெட் கேட்டால், அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டது. காவல்துறையின் இந்த அறிவிப்பை போல் ஐதராபாத் செல்லும் விமானத்திற்கு கடைசி நேரத்தில் 2 பேர் டிக்கெட் எடுத்துக்கொண்டு விமானத்துக்குள் சென்றனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் விமானத்துக்குள் அனுமதி வாங்கிச் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக சென்னை சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
" காலை (மார்ச் 25) ஆறரை மணியளவில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்தது தொடர்பாக உளவுத்துறை தகவல் அளித்தது. உடனே காவல்நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சங்கிலி பறிப்பு தடுப்பு ரோந்து குழு (Anti snatching patrol) அலெர்ட் செய்யப்பட்டது.
காலை 6 மணிக்கு சைதாப்பேட்டையில் முதல் சங்கிலி பறிப்பு நடந்தது. அடுத்து திருவான்மியூர் முதல் கிண்டி வரை ஆறு இடங்களில் சங்கிலிகளை பறித்துள்ளனர்" என்று அவர் கூறினார்.
கொள்ளை திட்டம் முடிந்ததும் விமான நிலையம் சென்று டிக்கெட் வாங்கிவிட்டு மும்பை அல்லது ஐதராபாத் என எந்த விமானம் கிடைக்கிறதோ அதில் ஏறிச் செல்வது கொள்ளைக் கும்பலின் பயணத் திட்டமாக இருந்ததாகக் கூறிய அருண், "முன்கூட்டியே டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வழக்கம் இந்தக் குழுவுக்கு இல்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கைதான நபர்களிடம் இருந்து 6 தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது 26.5 சவரன் ஆகும். சங்கிலி பறிப்பின் போது 65 வயதுப் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்" எனக்கூறினார்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!