by Vignesh Perumal on | 2025-03-25 10:50 PM
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அடுத்த ஆண்டு அதாவது 2026 இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில்தான் கூட்டணி உறுதிசெய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதிலும் சமீபத்தில், அதிமுக கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் தன்னை நம்பியவர்கள் யாரையும் கைவிட்டதில்லை என்று எடப்பாடி தெரிவித்திருந்தார். பாஜகவுடன் கூட்டணி பேச்சுக்கே இடமில்லை என்று கூறி வந்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிலைப்பாட்டில் தற்போது திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியை சார்ந்த பிரமுகர்கள் தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். எதிர்கட்சித் தலைவர் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி டெல்லி புறப்பட்டனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லியில் உள்ள நிலையில் அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்து அதிமுக பிரமுகர்கள் தலைவர்கள் டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளதால் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் புதியதாக அமைக்கப்படும் அதிமுக கட்சி அலுவலகத்தை பார்வையிடுவதற்கு வந்துள்ளதாக விமான நிலையத்தில் பழனிசாமி பேட்டி அளித்திருந்தார். இச்சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வருகிறார். டெல்லியில் முக்கியமானவர்கள் யாரையும் சந்திக்க வரவில்லை என கூறிய நிலையில் அமித்ஷாவுடன் சந்தித்து பேசினார். கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியுடன் அமித் ஷாவை சந்தித்து பேசினார். முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!