by Muthukamatchi on | 2025-03-25 09:34 PM
*கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களில் முதல் நபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.6,000/- அபராதமும் இரண்டாம் நபருக்கு 15 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.11,500/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்*25.03.2025 திண்டுக்கல் மாவட்டம் விருவீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சென்மார்பட்டி பகுதியைச் சேர்ந்த வனராஜா 40 என்பவரை சொத்து பிரச்சனை காரணமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ராஜேஷ் 35மற்றும் நித்தியா 33என்பவர்கள் அறிவாளால் வெட்டியும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் இரண்டு நபர்களை விருவீடு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்., இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி விளாம்பட்டி சரக காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஷர்மிளா அவர்கள், நீதிமன்ற முதல்நிலை காவலர் திருமதி.கோமதி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திரு.குமரேசன் அவர்களின் சீரிய முயற்சியால் இன்று 25.03.2025-ம் தேதி திண்டுக்கல் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளிகள் ராஜேஷ் என்பவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,000/- அபராதமும் நித்தியா என்பவருக்கு 15 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.11,500/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!