by Vignesh Perumal on | 2025-03-25 03:25 PM
தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சுங்கச்சாவடி கட்டணம் 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வானகரம், சூரப்பட்டு, நல்லூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் எனவும், பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது எனவும் கூறப்படுகிறது. மேலும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப். 1 முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இச்சூழலில், 40 சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 1ல் வானகரம் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 40 சுங்கச்சாவடிகளில் போராட்டம் நடத்த திட்டம் என அறிவிப்பு தரப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என அரச புரசலாக பேச்சுப்படுவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!