by Muthukamatchi on | 2025-03-23 06:24 PM
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு
தேனி மாவட்டம், மார்ச் 22-ஆம் தேதி தேவதானப்பட்டி பகுதியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு,
கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களான (செ. நவீன் பாண்டியன், வீ. பாபுக்குமார்,
சி. ஸ்ரீஹரிகுமார், ரா. விக்னேஸ்வரன், சு. திருமேனிநாதன், மு. ஜா.லோகேஸ்வரன், செ. சந்தோஷ் )சார்பாக கிராமப்புற அனுபவ பயிற்சித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்மாணவர்கள் தண்ணீர் சேமிக்கும் முறைகள்,
சொட்டுநீர் பாசனத்தின் முக்கியத்துவம் மற்றும் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் முறை பற்றி கூறினார்கள். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் கழிவு நீரை சுத்தம் செய்யும் செய்முறையை செய்து காட்டினார்கள். இந்நிகழ்ச்சியின் இறுதியில், மாணவர்கள் சார்பாக கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கிராம மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு தீர்வு கூறி, விழிப்புணர்வு நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!