by Vignesh Perumal on | 2025-03-22 06:33 PM
பழனிசெட்டிபட்டியில் உள்ள மேகனா மில்ஸ் மைதனாத்தில் புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை மாலை தொடக்க விழா நிகழ்ச்சி நிரலில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வரவேற்புரை திருமதி ஐ. மகாலட்சுமி அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் வழங்குகிறார். விழாவின் தலைமை
திரு. ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர். புத்தகத் திருவிழாவினை தொடங்கி வைத்து விழாப் பேருரையை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. ஐ. பெரியசாமி அவர்களும், விழாவிற்கு முன்னிலை திரு. தங்க தமிழ்செல்வன் அவர்கள், தேனி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும், வாழ்த்துரை திரு. கே.எஸ். சரவணக்குமார் அவர்கள் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரும், திரு. ஆ. மகாராஜன் அவர்கள். சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிபட்டி, திரு. அ. மிதுன்சக்கரவர்த்தி அவர்கள். பேரூராட்சித் தலைவர், பழனிசெட்டிபட்டி. திரு. என். இராமகிருஷ்ணன் அவர்கள். கம்பம் சட்டமன்ற உறுப்பினர். திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர். திருமதி ரேணுபிரியா பாலமுருகன் அவர்கள் தேனி அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் மற்றும் அனைத்து நகர்மன்றத் தலைவர்கள்/துணைத்தலைவர்கள், அனைத்து பேரூராட்சித் தலைவர்கள்/துணைத்தலைவர்கள் பங்கேற்று இவ்விழாவை சிறப்பிக்க உள்ளனர்.
மேலும், நாளை (23.03.2025) மாலை தொடங்கி ஒரு வாரம் அதாவது 30.03.2025 அன்று வரை நடக்கவுள்ள திருவிழாவில், ஒவ்வொரு நாள் மாலையும் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கிராமியக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டம் எத்தனையோ எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சினிமா படைப்பாளர்களை கொண்டுள்ளது. நாளை முதல் நடைபெற இருக்கக்கூடிய புத்தகத் திருவிழா தேனி மாவட்டத்தில் நடைபெறும் மூன்றாவது புத்தக திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!