by Vignesh Perumal on | 2025-03-22 02:12 PM
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செயல்பட்டு வரும் முழு நேர கிளை நூலகத்தில் இன்று காலை 11:30 மணி அளவில் நூற்றாண்டு நூலகம் கவிப்பேரரசு அரங்கில் உலக தண்ணீர் தினம் பற்றிய கலந்துரையாடல் மழைபொழிவு, மரம் வளர்ப்பு, இயற்கை வளம் பாதுகாப்பு, தண்ணீர் பயன்பாடு உயிரினங்கள் தண்ணீர் தேவை குறித்து கருத்துக்கள் பரிமாற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் நூற்றாண்டு நூலக வாசகர் வட்டம் & நூலகர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், 2025, உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் " பனிப்பாறை பாதுகாப்பு ". இந்த கருப்பொருள் பனிப்பாறைகளைப் பாதுகாப்பதை வலியுறுத்துகிறது மற்றும் முக்கிய நன்னீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு நீர் பாதுகாப்பை உறுதி செய்யவும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது.
உலக தண்ணீர் தினமான இன்று நாம் அனைவரும் தண்ணீரை தேவைக்கு ஏற்றார் போல் பயன்படுத்தி, உலக நலனுக்காக பாடுபடுவோம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!