| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் Congress

புதிய பேருந்து நிலையம்....! குளறுபடிகள்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!

by Vignesh Perumal on | 2026-07-22 12:03 PM

Share:


புதிய பேருந்து நிலையம்....! குளறுபடிகள்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!

திண்டுக்கல்லில் அமையவிருக்கும் புதிய பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் புதிதாக அமையவிருக்கும் பேருந்து நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டதில் குளறுபடி இருப்பதாகக் கூறி, அதை மக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவான வேறு பகுதிக்கு மாற்றக் கோரி திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களின் வசதிக்காகவும் ரூ. 47 கோடியிலும் அதிக மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகத் திண்டுக்கல் - வத்தலக்குண்டு பைபாஸ் சாலை அருகேயுள்ள பள்ளப்பட்டி / கொட்டப்பட்டி பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்குத் தொலைவாகவும், போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதியாகவும் இருக்கிறது.

ஏற்கனவே தோல் தொழிற்சாலைகள் இயங்கிய பகுதியாக இருப்பதால் நிலத் தரம் குறித்த சந்தேகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் கேள்விகள் எழுந்துள்ளன.

இதனால், பொதுமக்கள் மற்றும் நகர்ப்புறப் பயணிகளுக்குப் பெரும் சிரமம் ஏற்படும் எனக் கூறி, இத்திட்டத்திற்கான இடத்தை மாற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாநகர மையப் பகுதியில் நடைபெற்ற இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் தலைமை தாங்கினர். இதில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

தற்போதைய நகர்ப்புற மையப்பகுதிக்கும், ரயில் நிலையத்திற்கும் எளிதில் செல்லும் வகையில் அணுகுமுறை உள்ள மாற்று இடத்தை புதிய பேருந்து நிலையத்திற்குத் தேர்வு செய்ய வேண்டும்.

பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பயணிகள் அமைப்புகளின் கருத்துக்களை முறையாகக் கேட்டறிந்த பின்னரே புதிய இடத்தை இறுதி செய்ய வேண்டும். புதிய பேருந்து நிலையம் அமையும் இடத்தில் சுற்றுசூழல் பாதிப்புகளோ அல்லது நிலத் தரக் குறைபாடுகளோ இல்லை என்பதைப் பகிரங்கப்படுத்த வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகவும், திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் தீவிரக் கோஷங்களை எழுப்பினர்.

புதிய பேருந்து நிலைய இடம் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் தங்களது மாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் இந்தத் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாற்று இடத்தை உடனடியாக பரிசீலிக்காவிட்டால், போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.







நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment