by Vignesh Perumal on | 2026-07-21 04:59 PM
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக (DMS) வளாகத்தில், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீரெனத் திரண்டு முறையீடு போராட்டத் தொடரில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதியச் செவிலியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரக் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்தின் முதன்மை கோரிக்கைகளில் கூறியிருப்பதாவது, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலமாகத் தேர்வு செய்யப்பட்டு, பல ஆண்டுகளாகக் குறைந்த தொகுப்பூதியத்தில் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் 6,500-க்கும் மேற்பட்ட செவிலியர்களை உடனடியாகக் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தரச் செவிலியர்களுக்கு இணையான பணிச் சுமைகளைச் சுமக்கும் தங்களுக்குக் குறைந்தபட்ச ஊதிய உரிமைகளும், பணிப் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.
தங்கள் சங்கத்தின் உண்மையானப் பிரதிநிதிகளை அழைத்து அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கப் பிரதிநிதிகள் இது குறித்துத் தெரிவிக்கையில், "தங்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக மருத்துவத் துறை அதிகாரிகளிடமும், அமைச்சரிடமும் பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித சாதகமான முடிவும் எடுக்கப்படவில்லை. போராட்டத் தொடர்பில்லாத நபர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர்த்து, நேரடியாகப் பாதிக்கப்பட்ட செவிலியர்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க வேண்டும்" எனக் குற்றம்சாட்டினர்.
முன்னரே அறிவித்தபடி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் டி.எம்.எஸ். (DMS) அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து தங்களது கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
திடீர் போராட்டம் காரணமாக டி.எம்.எஸ். வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். செவிலியர்களின் இந்தப் போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளின் செவிலியர் பணிச் சேவைகள் பாதிக்கப்படாத வகையில், பேச்சுவார்த்தை நடத்திப் போராட்டத்தைக் கைவிடச் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
அரசு நிர்வாகத்தில் வெற்றி பெறுவாரா..?? முதல்வர் விஜய்...!!! கட்டுரை யாளர் மா பாண்டியராஜ்....!!!"
காரில் கடத்தல்...! 2 பேர் கைது...! கார், செல்போன்கள் பறிமுதல்...!
தமிழகத்தில் பரபரப்பு...! திடீரென திரண்டு போராட்டம்...!
அலுவலகத்திலேயே டிஜிபி தற்கொலை...! முதல்வர் நேரில் விரைந்தார்...!
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு...! எம்.எல்.ஏ-வின் பேச்சுக்கு...! அமைச்சர் வன்னி அரசு காரசார எச்சரிக்கை...!