by Satheesh on | 2025-03-15 09:47 PM
தேனி : பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த ஆண்டு நடைபெறும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, 10ம் வகுப்பில் படிப்பில் பின் தங்கிய 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில், பெற்றோர்களின் அனுமதியுடன் கடந்த 10 நாட்களுக்கு மேலாக எல்லா பாடங்களுக்கும் சுழற்சி முறையில் தினமும் இரண்டு ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். இதனால் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் இப்பணியை அவர்கள் செய்து வருவதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். மாணவர்களும் ஆசிரியர்களுக்கு ஒத்துழைத்து, படிப்பை ஆர்வத்துடனும் கவனத்துடனும் பயின்று வருவதாக கூறுகின்றனர். எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஆசிரியர்களின் ஆர்வத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!