by admin on | 2026-01-12 06:43 PM
தேனி மாவட்டம் பொதுமக்கள் புகையில்லாத போகிப்பண்டிகையை கொண்டாட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் தற்பொழுது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு, விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. மேலும், நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் ஏரிச்சல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நச்சுப்புகை கலந்த பனிமூட்டத்தால் சுகாதார பாதிப்பும், சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது. எனவே, இவ்வருடமும் பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!