by admin on | 2026-01-07 06:24 PM
தேனி மாவட்டம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்புடன் ரொக்கத்தொகை ரூ.3000/- வழங்க தமிழ்நாடு அரசால் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சிரமமின்றி பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொள்ள ஏதுவாக 05.01.2026 முதல் சம்மந்தப்பட்ட நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள 4,30,825 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.
பொங்கல் தொகுப்பு தொடர்பாக குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் கீழ்க்கண்ட அலுவலர்களிடம் புகார்களை தெரிவிக்கலாம்.
வட்டவழங்கல் அலுவலர், ஆண்டிபட்டி - 9445000332
கூட்டுறவு சார் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்), ஆண்டிபட்டி - 9842965757
வட்ட வழங்கல் அலுவலர், தேனி - 9445000330
கூட்டுறவு சார்பதிவாளர், தேனி - 8637497714
வட்டவழங்கல் அலுவலர், போடிநாயக்கனூர் - 9445000334
கூட்டுறவு சார்பதிவாளர், போடிநாயக்கனுார் - 9944283861
வட்டவழங்கல் அலுவலர் பெரியகுளம் - 9445000331
கூட்டுறவு சார்பதிவாளர், பெரியகுளம் - 8778336563
வட்டவழங்கல் அலுவலர், உத்தமபாளையம் - 9445000333
கூட்டுறவு சார்பதிவாளர், உத்தமபாளையம் - 9150531435
கூட்டுறவு சார்பதிவாளர், கம்பம் - 8939841405
மாவட்ட வழங்கல் அலுவலர், தேனி (மாவட்ட முழுவதும்) - 9445000329
கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில், குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் நியாயவிலைக் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!