by satheesh on | 2026-01-05 07:21 PM
சென்னையில் நாளை முதல் காலி மதுபாட்டில்களைத் திரும்பப்பெறும் திட்டம் மீண்டும் அமலாகிறது; இதற்காக மது வாங்கும் போதே கூடுதலாக ரூ.10 கொடுக்க வேண்டும்.மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ரூ.10/-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் புதிய திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், மதுபானம் வாங்குபவர்களை *‘வாடிக்கையாளர்கள்’* என குறிப்பிடப்பட்டுள்ள சொல் தேர்வு, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசே நடத்தும் மதுபான விற்பனை தொடர்பான அறிவிப்பில், மதுபானம் வாங்குபவர்களை *‘வாடிக்கையாளர்கள்’* என குறிப்பிடப்பட்டிருப்பது, இந்த நடவடிக்கையை ஒரு சமூகப் பிரச்சினையாக அல்லாமல், நிர்வாக மற்றும் வணிக செயல்பாடாக மட்டுமே அரசு அணுகுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சட்டம் மற்றும் நிர்வாக ரீதியாக, சில்லறை விற்பனை அமைப்புகளில் *‘வாடிக்கையாளர்’* என்ற சொல்லைப் பயன்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாக சரியானதாக இருக்கலாம் என்றாலும், *சமூக மற்றும் குடும்ப பாதிப்புகள் அதிகம் உள்ள மதுபானக் கொள்கையில்* பயன்படுத்தப்படும் மொழி, அரசின் முன்னுரிமைகள் எதுவென்பதை வெளிப்படுத்துகிறது என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!