by satheesh on | 2026-01-05 03:47 PM
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அவர்களுக்கு பென்சில் ஸ்கெட்ச் பரிசளித்த மாணவி — ஊக்க வார்த்தைகளுடன் நூல் பரிசளித்த எஸ்பி ; கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த Afreen Jessica, நூருல் இஸ்லாம் கல்லூரியில் எம்பிஏ படித்து வரும் மாணவி, தனது கலை திறமையை வெளிப்படுத்தும் வகையில் மாவட்ட காவல் துறை தலைமை அதிகாரி, IPS. R. Stalin, கான்யாகுமரி மாவட்ட எஸ்பி அவர்களுக்கு தனியாக உருவாக்கிய பென்சில் ஓவியத்தை சமீபத்தில் பரிசளித்தார்.
Afreen Jessica உடன் அவரது தம்பி Gershon Rich Sam மற்றும் தந்தை Arul Manoj Sam ஆகியோரும் இதில் கலந்து கொண்டு அவருக்கு உறுதுணையாக இருந்தனர். அவரது படைப்பை பெற்றுக்கொண்ட எஸ்பி R. Stalin அவர்கள், Afreen-ன் திறமையை பாராட்டி, கலை மற்றும் படைப்பாற்றலுக்கு வழங்கிய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என குறிப்பிட்டார். மேலும், அவர் எழுதிய ஊக்கமளிக்கும் தனிப்பட்ட வாழ்த்து உடன், “History: Day-By-Day” என்ற நூலை Afreen Jessica-க்கு பரிசளித்து, அவரது எதிர்காலத்திற்கான மனமார்ந்த ஆசிகளை தெரிவித்தார்.
இந்த அரிய தருணம் Afreen Jessica-க்கு ஒரு முக்கிய ஊக்கமாக அமைந்துள்ளது. தன்னுடைய படைப்பாற்றலை சமூக நலத்திற்கும் நேர்மையான செயல்களுக்கும் பயன்படுத்தும் மாணவிகளுக்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தேனியில் இலவச அமரர் உறுதி வானம் கிடைக்கவில்லை...!!! கைத்தள்ளு வண்டியில் பிணத்தை எடுத்துச் சென்ற பொதுமக்கள்...!! குரு ஐயப்பன் புகார்
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் தொல்லை கொடுக்கும் ஏ எஸ் ஓ பழனிச்சாமி.....???
சென்னையில் நேர்மையின் பாதை இதழ் வெளியீட்டு விழா...!!!"
கொடைக்கானலில் வாகனங்களுக்கு தடை! கலெக்டர் அதிரடி உத்தரவு !!
காதல் போட்டி - பிளஸ் 1 மாணவன் கொடூர கொலை ! 1 சிறுமி, 1 சிறுவன் உட்பட மூன்று பேர் கைது - அதிர வைக்கும் அதிர்ச்சி சம்பவம் !!