by admin on | 2026-01-04 08:54 PM
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் ஜனவரி மாத மாதாந்திர கூட்டம் மாவட்டச் செயலாளர் S.P.தில் பிரசாத்B.Com.,CA., தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,
ஜனவரி 27- ம் தேதி பழனி முருகன் கோவில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கு வழங்கப்படும் முதல் மரியாதையை மீட்டெடுத்த தமிழின வேந்தர் பெ.ஜான் பாண்டியன் அவர்களுக்கு பரிவட்டம் கட்டும் முதல் மரியாதை மண்டகப்படி நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்து கொள்வது.பிப்ரவரி மாதம் தேனி - போடி சட்டமன்றத் தொகுதியில் "வெல்லட்டும் பட்டியல் வெளியேற்றம் - உருவாகட்டும் சமத்துவம் " மாபெரும் பொதுக்கூட்டம் தலைவர் தமிழின வேந்தர் டாக்டர் திரு.பெ.ஜான் பாண்டியன் அவர்களை அழைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது.
மாவட்டத்தில் பெருகி வரும் போதை பொருட்களை ஒழிப்பது சம்பந்தமாக கிராமம் கிராமமாக துண்டறிக்கை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது. புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்துவது.பொது மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஊராட்சி ரீதியாக ஆர்ப்பாட்டம் நடத்துவது. போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் புத்தாண்டை மகிழ்ச்சிகரமாக வரவேற்கும் விதமாக கழக நிர்வாகிகள் அனைவரும் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டிற்காகன புதிய தினசரி காலண்டர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!