by admin on | 2026-01-03 03:04 PM
கோவில் நகரில் தகன மேடை கட்ட எதிர்ப்பு
தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்நிலையில் பக்தர்களுக்கு இளைப்பாறும் மண்டபம் கட்டுவதற்காக காணொளி காட்சி வாயிலாக ரூ. 2 கோடி 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டின் இன்று பூமி பூஜையை காணொளி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
இந்த நிலையில் புண்ணிய பூமியான குச்சனூரில் எரியூட்டும் தகனம் மேடை எனும் சுடுகாடு குத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சி முடிந்து திரும்பிய தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனின் கார் கண்ணாடியை டமால் டமார் என்று சிலர் தட்டி முற்றுகையிட்னர். மேலும் சுடுகாடு அமைக்க பேரூர் மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காரில் இருந்து கீழே இறங்கிய தங்க தமிழ்ச்செல்வன் எதற்கான காரை மறித்தீர்கள் என்று கேட்டார். அப்போது பொது மக்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் குச்சனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதி மக்கள் சுடுகாடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் இந்த தமிழ்செல்வனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் .
அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு. ஏற்பட்டது.மக்களுக்கு நிகராக காரில் இருந்து இறங்கி மக்களுடன் மல்லுக்கட்டிய தேனி எம்பி யின் செயல் அப்பகுதி பெரும் பரபரப்பில் ஏற்படுத்தி உள்ளது. மேலும் பிரச்சினைகள் வராமல் இருப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர்.9842337244
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!