by Muthukamatchi on | 2025-03-08 06:46 PM
திண்டுக்கல் அருகே சுமை தூக்கும் தொழிலாளியை குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லை அடுத்த ம.மு.கோவிலூர் அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் இவர் அதே பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக வெங்கடேசை பாறைப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரவிச்சந்திரன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார்இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வெங்கடேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு அதே பகுதியில் பதுங்கி இருந்த ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!