by admin on | 2025-02-18 09:39 PM
செங்கோட்டையில் சொத்து பிரச்சனையில் அண்ணனை வண்டி ஏற்றி கொலை செய்ய முயற்சித்து விபத்து என்று நாடகமாடிய தம்பி மற்றும் தம்பி மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் புளியரை தெற்குமேடு பாக்யாநகரை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவர்காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது உடன் பிறந்த தம்பி அதே ஊரை சேர்ந்த இருளப்பன் என்பவருக்கும் நடைபாதை பிரச்சனை இருந்து வந்தது. தம்பி இருளப்பன் மற்றும் இவரது மகன் வினோத்குமார் இருவரும் சேர்த்து சுப்பையா பாண்டியனை கொலைசெய்யமுடிவெடுத்து சுப்பையா பாண்டியன் காய்கறி வியாபாரத்திற்காக தனது இரு சக்கர வாகனத்தில் செங்கோட்டை காவல்நிலையஎல்கைக்குட்பட்ட பெரிய பிள்ளை வலசைவழியாக செல்லும் போது அவரை பின் தொடர்ந்து (pickup) வண்டியை ஓட்டி வந்த வினோத்குமார் என்பவர் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார். இது சம்பந்தமாக செங்கோட்டை காவல் ஆய்வாளர் K.S. பாலமுருகன் சம்பவம் இடம் சென்று விசாரித்து அங்குள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்ததில் நடந்த சம்பவம் விபத்து இல்லை கொலை முயற்சி என விசாரணையில் தெரிய வர சம்பவத்தில் ஈடுபட்ட இருளப்பன் மற்றும் அவரது மகன் வினோத்குமார் மற்றும் அவர்கள் பயன்படுத்திய (pickup) வண்டியையும் பிடித்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
நிருபர் பாஸ்கரன் தேனி
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!