by Satheesh on | 2025-06-27 04:48 PM
திண்டுக்கல்: வேடசந்தூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து அப்பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வசந்தம் நகர் பகுதியில் சதீஷ்குமார் என்பவரின் பேக்கரி குடோனில் பதுக்கி வைத்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த ரத்தினவேலு, சீனிவாசன், சுப்பையா, அக்பர்அலி, ராஜன், உமர்பாரூக்,அன்சாரி ஆகிய 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,55,000 மதிப்புள்ள 1,550 அஸ்ஸாம் மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.44 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளி மாநில லாட்டரி சீட்டுகளை கரூரில் பாண்டியன் என்பவரிடமிருந்து இருந்து வாங்கி வந்து இங்கு வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது.
செய்தியாளர் : N சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!
கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே உல்லாசம் - இடையூறாக இருந்த கணவன் கொலை ! 3 பேரை தூக்கிய போலீஸ் !!
ரயிலில் கணவருக்கு சீட் - மனைவியிடம் பாலியல் அத்துமீறல் ! போதை டிடிஇ கைது !!
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!