by Satheesh on | 2025-06-24 11:00 PM
திண்டுக்கல் : நத்தம் மங்களப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரது மனைவி பச்சையம்மாள். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் PACL –ல் ஏஜென்டாக வேலை பார்த்து வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து மேற்படி நிறுவனத்தில் செலுத்தியுள்ளார் என்பதும் இதேபோல நாடு முழுவதும் பலர் இந்நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பதும் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், அமலாக்கத்துறையிலும் விசாரணையில் இருந்து வருகிறது என தெரியவருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் மனவிரக்தி அடைந்த மேற்படி பச்சையம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அப்போது பாதுகாப்பிலிருந்த காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் கூட்டம் முடிந்த பின்பு, அனைவரும் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென பெட்ரோல் ஊற்றி பற்றவைத்தவாறு கத்திக்கொண்டே ஓடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!
கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே உல்லாசம் - இடையூறாக இருந்த கணவன் கொலை ! 3 பேரை தூக்கிய போலீஸ் !!
ரயிலில் கணவருக்கு சீட் - மனைவியிடம் பாலியல் அத்துமீறல் ! போதை டிடிஇ கைது !!
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!