by Vignesh Perumal on | 2025-06-04 02:10 PM
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கொடைக்கானல் சுற்றுலா சென்று திரும்பிய மினி சொகுசுப் பேருந்து சாலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை, பழனி சட்டமன்ற உறுப்பினரும், திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர், மினி சொகுசுப் பேருந்து மூலம் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தனர். வத்தலகுண்டு அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தப் பேருந்து சாலை விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்த பழனி சட்டமன்ற உறுப்பினரும், திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சுற்றுலாப் பயணிகளை நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அத்துடன், அவர்களுக்குத் தேவையான உயர்தர சிகிச்சையை விரைந்து வழங்குமாறு மருத்துவர்களையும், மருத்துவமனை நிர்வாகத்தையும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வின்போது, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா உள்ளிட்ட தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்களும் உடன் இருந்து, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!