by Muthukamatchi on | 2025-06-02 03:38 PM
மக்களின் குறைகளை நேரில் சென்று கேட்டறியும் எம் எல் ஏ கே சரவணகுமார்.
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் வரவேற்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் தனித்தொகுதிசட்டமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணி செய்து வருகிறார் கே எஸ் சரவணகுமார், இவர் கடந்து சில நாட்களாக பெரியகுளம் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் நேரில் சென்று பொதுமக்களின் குறைகளையும் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் பிரச்சனையாக உள்ள விவரங்களையும் மக்களிடம் நேரில் சென்று மனுக்களாக பெற்று வருகிறார்.
இவர் மனுக்களை பெறச் செல்கின்ற பொழுது ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் உள்ளனர். ஒரு மனுவை பெற்றவுடன் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அந்த மனுவை வாசிக்கச் சொல்லி அதற்கான தீர்வுகளை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்கிறார் அதற்கான பதிலை அதிகாரிகள் கூறியவுடன் தீர்க்க முடியாத பிரச்சினைகளை விரைவில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சனை தீர்த்து தருவதாக பொதுமக்களிடம் உறுதி குறி வருகிறார் எம்.எல்.ஏ சரவணகுமார். இவரின் இச்செயல் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இன்று பெரியகுளம் ஒன்றியம் சில்வார்பட்டி ஊராட்சிகள் எம் எல் ஏ கே சரவணகுமார் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். மேலும் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கலந்து கொண்டு எம்எல்ஏ பேசியபோது இவ்ளோ ஸ்டாலின் அவர்களின் அரசு மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறினார்.
எவிடன்ஸ் பத்திரிக்கை உடைய வெளியீட்டாளர் தி.முத்து க்காமாட்சி எம் எல் ஏ கே எஸ் சரவணகுமார் அவர்களிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்,
அந்த மனுவில்
சில்வார்பட்டி கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவுநீர் அனைத்தும் கிராமத்தின் தெற்கு பக்கம் உள்ள ஊரணிகள் சேருகிறது. இந்த ஊர் எண்ணிக்கை மையப்படுத்தி அங்கன்வாடி துணை சுகாதார நிலையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. ஊரணிகள் தேங்கும் கழிவு நீரால் குழந்தைகளும் மாணவர்களும் கற்பனைகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஊரணையை தூர்வாரி தூய்மைப்படுத்தி ஊரணிகள் கழிவுநீர் தேங்குவதை தடுக்க கழிவுநீர் கால்வாய் கட்டி வரத்து கால்வாய் இணைக்க வேண்டும் என்றும். ஊரணிக்கு கிழக்குப் பக்கத்தில் 500 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. விலை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு வருவதில் வரத்துக் கால்வாயை கடந்து வருவது சிரமமாக உள்ளது, எனவே வரத்துக் கால்வாயில் சிறிய பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனிதனை எம்எல்ஏவிடம் கொடுத்தார்.
அதற்கு பி டி ஒ மலர்விழி அவர்கள் அந்த இடத்தை பார்வையிட்டுள்ளோம் . இந்தக் கோரிக்கை தொடர்பாக பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று எம்.எல்.ஏ விடம் கூறினார். இந்த நிகழ்ச்சியில்
பெரியகுளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எல் எம். பாண்டியன், பி டி ஒ மலர்விழிமற்றும் சில்வார்பட்டி திமுக கிளைச் செயலாளர்கள் மேற்கு தங்கவேல் , தெற்கு காலனி மாயன், வடக்குத் தெரு தெய்வம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முருகபாண்டி , உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!