by Vignesh Perumal on | 2025-05-27 06:26 PM
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கோயில்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எல்.சாந்தாமணி என்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.3,50,000/- (ரூபாய் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம்) நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் முனைவர் நீதியரசர். ச.தமிழ்வாணன் அவர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்வில், ஆணையத்தின் துணைத் தலைவர் திரு.இமயம் (வெ.அண்ணாமலை), உறுப்பினர்கள் திரு.செ.செல்வகுமார், முனைவர் திரு.சு.ஆனந்தராஜா, திரு.மு.பொன்தோஸ், திரு.பொ.இளஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் திரு.ந.ஜெயகுமார் அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதிலும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதிலும் தமிழ்நாடு அரசு மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியுதவி, சாந்தாமணி தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துக்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!