by Vignesh Perumal on | 2025-05-26 11:23 AM
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே அய்யலூர் - எரியோடு சாலையில் செட்டிகளத்தூர் ரைஸ் மில் அருகே சாலையோரத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (மே 26, 2025) காலை அவ்வழியே சென்றவர்கள், செட்டிகளத்தூர் ரைஸ் மில் அருகே சாலையின் ஓரத்தில் ஒரு வாலிபர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு வடமதுரை போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை போலீசார், உயிரிழந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார் என்பது குறித்த அடையாளம் இதுவரை தெரியவில்லை.
போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் வாகனம் மோதி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் உயிரிழந்தாரா? கொலையா? தற்கொலையா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதுடன், பொதுமக்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மர்ம மரணச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!