by Vignesh Perumal on | 2025-05-24 12:50 PM
சென்னை பெரம்பூர் அருகே உள்ள ஒரு டிபன் கடையில், மதுபோதையில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்ததுடன், 5 ஆயிரம் ரூபாய் "மாமூல்" கேட்டு தகராறில் ஈடுபட்ட பீமாராவ் குடியரசு கட்சியின் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர், அகரம் சாலைப் பகுதியில் உள்ள ஒரு டிபன் கடைக்கு நேற்று (மே 23, 2025) இரவு பீமாராவ் குடியரசு கட்சியின் மாவட்ட செயலாளரான கிஷோர் குமார் வந்துள்ளார். மதுபோதையில் இருந்த அவர், கடையில் உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
சாப்பிட்டு முடித்ததும், உணவுக் கட்டணத்தை செலுத்த மறுத்த கிஷோர் குமார், கடை உரிமையாளரிடம் 5 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர், மாமூல் கொடுக்க மறுக்கவே, கிஷோர் குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கடை உரிமையாளர் உடனடியாக பெரம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கிஷோர் குமாரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மதுபோதையில் இருந்ததும், பணம் கொடுக்க மறுத்து மாமூல் கேட்டு மிரட்டியதும் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கிஷோர் குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மற்ற வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!