by Vignesh Perumal on | 2025-05-18 12:55 PM
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே புளிய மரத்தில் போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் காவல் ஆய்வாளர் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (18.05.2025) காலை காட்பாடி அருகே நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் காவல் ஆய்வாளர் தயாளன், வாகனத்தின் ஓட்டுநர் தினேஷ் மற்றும் ஆய்வாளர் தயாளனின் மகன் சித்தா தர்ஷன் ஆவர். இவர்கள் மூவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் வாகனம் காட்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரத்திலிருந்த புளிய மரத்தில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!