by Vignesh Perumal on | 2025-05-18 12:44 PM
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் நேற்று (17.05.2025) இரும்பு கேட் விழுந்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்களின் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி, தனியார் நிறுவனத்தின் மேலாளர் எபனேசர் கிருபாகரன் மற்றும் உற்பத்தி பிரிவு மேலாளர் சிவபெருமாள் ஆகியோர் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அஜாக்கிரதையாக தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதித்தது, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!