by admin on | 2025-02-04 07:12 AM
திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.15,50,000 மோசடி செய்த வழக்கில் கேரளா வாலிபர் கைது
திண்டுக்கல், R.M.காலனியை சேர்ந்த 30 வயது பெண்ணிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி வாட்ஸ் அப் மூலம் பயிற்சிஅளித்து பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.15,50,000 பணத்தைப் பெற்றுக் கொண்டனர் அதன் பிறகு அந்த பெண் அவர்களின் செல்போனுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை இதைத் தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் அவர்களிடம் புகார்அளித்தா ர். இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் ADSP. தெய்வம் மேற்பார்வையில் சைபர் கிரைம் ஆய்வாளர் விக்டோரியா லூர்துமேரி, தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் லாய்டுசிங் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சென்னையை சேர்ந்த ஜீவா(31) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சமீர்(42) என்பவரை கேரளாவில் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தி படம் நன்றி :
மோகன் கணேஷ் திண்டுக்கல்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!