by Vignesh Perumal on | 2025-05-15 02:33 PM
தாம்பரம் ஈஸ்ட் போக்குவரத்து காவல்துறையினர் வேளச்சேரி மெயின் ரோட்டில் மெட்ராஸ் கிறிஸ்டின் கல்லூரி அருகே இன்று (மே 15, 2025) வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். உதவி ஆய்வாளர் சந்தோஷ் தலைமையிலான குழுவினர் அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவேடுகள் போன்ற முக்கிய ஆவணங்களை சரிபார்த்து வந்தனர்.
அப்போது, அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரும்பு தடுப்புகள் (பேரிகாடுகள்) அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருசக்கர வாகனங்கள் வரும்போது, சாலையின் இடது மற்றும் வலது பக்கங்களில் தடுப்புகள் நெருக்கமாக வைக்கப்பட்டிருந்ததால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். குறுகிய இடைவெளியில் தடுப்புகள் இருந்ததால், வாகனத்தை ஓட்டிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டு, நிலை தடுமாறி விழும் அபாயகரமான சூழ்நிலை உருவானது.
இந்த நிலைமையை கண்ட வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. பகல் நேரத்திலேயே இதுபோன்ற ஆபத்தான நிலைமை நீடித்தால் விபத்துக்கள் நேரிட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகன தணிக்கை மேற்கொள்வதோடு, பாதுகாப்பான முறையில் தடுப்புகளை அமைக்குமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி-ஜெயவேல் தாம்பரம்-சென்னை.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!