by Vignesh Perumal on | 2025-05-14 03:38 PM
கோவை மாநகரில் நிலவும் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில், போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி மூலம் இயங்கும் ஃபேன் வசதி கொண்ட ஹெல்மெட்களை காவல் ஆணையர் இன்று அறிமுகப்படுத்தினார்.
முதற்கட்டமாக, தலா ரூ.15,000 மதிப்புள்ள இந்த அதிநவீன ஹெல்மெட்கள் 36 போக்குவரத்துக் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஹெல்மெட்களில் சிறிய பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இது ஹெல்மெட்டுக்குள் காற்றை உட்செலுத்தி குளிர்ச்சியான சூழலை உருவாக்கும். இதனால் வெயிலின் தாக்கம் காவலர்களுக்கு பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய முயற்சியை தொடங்கி வைத்த காவல் ஆணையர் அவர்கள் கூறுகையில், "கோடை காலத்தில் போக்குவரத்துக் காவலர்கள் வெயிலில் நின்று பணிபுரிவது மிகவும் சிரமமான விஷயம். அவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு இந்த பேட்டரி ஃபேன் வசதி கொண்ட ஹெல்மெட்களை வழங்கியுள்ளோம். இது அவர்களுக்கு பணிபுரியும் போது அதிக சௌகரியத்தை கொடுக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.
மேலும், இந்த ஹெல்மெட்களின் செயல்பாடு மற்றும் காவலர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர், தேவைக்கேற்ப கூடுதல் ஹெல்மெட்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த புதிய வசதிக்கு போக்குவரத்துக் காவலர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். வெயிலில் நீண்ட நேரம் பணிபுரிவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!