by Vignesh Perumal on | 2025-05-11 07:25 PM
திண்டுக்கல்லில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் நேற்று (மே 10, 2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "இந்திய அரசு பின்பற்றும் பல்வேறு திட்டங்களை கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசும் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. சுதந்திர நாட்டில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் பள்ளி நிதி மற்றும் இரண்டு பேரிடர் நிவாரண நிதியை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தரட்டும். தெர்மாகோல் விஞ்ஞானி செல்லூர் ராஜு ஒவ்வொன்றிலும் புதிதாக கண்டுபிடிப்பார். அவருக்கு பதில் சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் அறிவாளிகள் இல்லை.
மேலும், கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!